கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் மெட்டா. இந்த நிறுவனத்தின் கீழ் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மெட்டாவும் ஒன்றாக உள்ளது.இந்நிலையில் தான் வருகையால் மெட்டா நிறுவனம் ஏஐ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்று முடிவு செய்து இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏஐ பிரிவில் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தியது. இதற்காக பல மில்லியன் டாலர் வரை செலவிடப்பட்டது.
இந்த நிலையில், நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக மெட்டாவில் பணிபுரியும் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் AI பிரிவு தலைமை அதிகாரி வாங் தகவல் அளித்துள்ளார். மெட்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் AI உள்கட்டமைப்பு அலகுகள், அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவு (FAIR) மற்றும் பிற தயாரிப்பு தொடர்பான பதவிகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். AI தொழில் நுட்பம் வந்த பிறகு பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வது தொடர்கதையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
