Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மெட்டா அறிமுகப்படுத்திய அதிநவீன அம்சங்களைக் கொண்டிருக்கும் ஸ்மார்ட் கண்ணாடி

டெல்லி: வளர்ந்து வரும் தொழில்நுப்ப உலகத்தில தினமும் புது புது அப்டேட் குடுத்து இந்த ஓபன் ஏஐயும், கூகுள் ஜெமினியும் நம்பள பிரம்மிப்புல ஆழ்த்திட்டு இருக்கு. சாட் ஜிபிடி யோட கார்ட்டூன் ஜிபிலி புகைப்படங்கள், கூகுள் ஜெமினியோட நானோ பனானாஏஐ ஸ்டுடியோனு புது புது ட்ரெண்ட் வந்துட்டே இருக்கு. இதில் எல்லாத்தை விடவும் ஒரு படி மேல ஏஐ தொழில்நுட்பத்தில இயங்குற புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை மெட்டா நிறுவனம் அறிமுகம் பண்ணி இருக்கு அதை மார்க் ஜக்கபக் வெளியிட்டார்.

மொபைல் பயன்பாட்டை குறைக்கும் விதமா இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறதா வல்லுனர்கள் சொல்றாங்க இந்த ஸ்மார்ட் கண்ணாடி 12எம்பி கேமரா, மேப் மற்றும் புகைப்படங்களை பார்ப்பது, வாட்ஸ்அப், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களை இயக்குவது போன்ற பல அம்சங்களை கொண்டிருக்கு. இந்திய மதிப்பின் படி இதன் விலை ரூ.70,300ஆக நிர்ணயம் பண்ணிருக்காங்க. இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கு. இனி மொபைலே தேவையில்லை, ஏஐயோட ஸ்மார்ட் கண்ணாடிக்கு தயாராகுங்க.