ஃபோர்ட் லாடர்டேல்: மேஜர் லீக் கால்பந்து போட்டித் தொடரில், அட்லாண்டா யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் இன்டர் மியாமி அணிக்காக ஆடிய அர்ஜென்டினா நாட்டு கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 2 கோல்கள் அடித்ததோடு, ஒரு கோல் போட சக அணி வீரருக்கு உதவினார்.
இதனால், 4-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மியாமி அபார வெற்றி பெற்றது. இந்த கோல்களுடன் சேர்த்து, மேஜர் லீக் கால்பந்து தொடரில், மெஸ்ஸி 26 கோல்கள் அடித்து முன்னிலையில் உள்ளார். தவிர, 18 கோல்களை பிறர் போட மெஸ்ஸி உதவியுள்ளார்.