பெங்களூரு: கால்பந்து உலகில் புகழ்பெற்றவரும் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி, 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். 13ம் தேதி ஐதராபாத் வரும் அவருடன் ரசிகர்கள் சிறப்பு புகைப்படங்களை எடுத்து கொள்ளலாம். ஒரு புகைப்படத்திற்கு ரூ.10 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்பாட்டு குழுவின் ஆலோசகர் பார்வதி ரெட்டி கூறுகையில், ‘மெஸ்ஸி வரும் 13ம் தேதி மாலை ஐதராபாத் வருகிறார். பலக்னுமா அரண்மனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மெஸ்ஸியை சந்திக்கலாம். அவருடன் நீங்கள் புகைப்படம் எடுக்கலாம்.
ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரூ.9.95 லட்சம் (ஜிஎஸ்டி) கூடுதலாக செலவாகும். இதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் மாவட்ட செயலியில் கிடைக்கும். 100 பேர் மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும். உப்பல் மைதானத்தில் 3 மணி நேர நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுகளில் மெஸ்ஸி பங்கேற்பார். பின்னர் நடைபெறும் அணிவகுப்பில் முதல்வர் ரேவந்த் ரெட்டி மெஸ்ஸியை கவுரவிப்பார். மாவட்ட செயலியில் அனைத்து வகையான டிக்கெட்டுகளும் கிடைக்கும். இந்த நிகழ்வுக்கு கிரிக்கெட் வீரர்கள் அழைக்கப்படவில்லை’ என்றார்.


