மெக்சிகோ சிட்டி: மேஜர் லீக் கால்பந்து (எம்எல்எஸ்) கோப்பை இறுதிப் போட்டி மெக்சிகோ சிட்டியில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (38) தலைமையிலான இன்டர் மயாமி அணியும், ஜெர்மனியை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் தாமஸ் முல்லர் தலைமையிலான வான்கூவர் ஒயிட்கேப்ஸ் அணியும் மோதுகின்றன. கால்பந்து உலகில் இருவரும் ரசிகர்களால் போற்றப்படும் முக்கியத்துவம் வாய்ந்த வீரர்களாக திகழ்வதால் இன்று நடக்கும் போட்டி கால்பந்தாட்ட அரங்கில் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
+
Advertisement

