மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், ஏஎம்ஜி சிஎல்இ 53 கூபே காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 3.0 லிட்டர் டிவின் டர்போ இன்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு-ஹைபிரிட் சிஸ்டம் உள்ளது. இது அதிகபட்சமாக 449 எச்பி பவரையும், 560 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 9 ஸ்பீடு டார்க்கியூ கன்வர்டர் உள்ளது.
100 கி.மீ வேகத்தை 4.2 நொடிகளில் எட்டும். அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகம் வரை செல்லும். 12.3 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம், ஹெட் அப் டிஸ்பிளே உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.1.35 கோடி.