Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மாணவ, மாணவிகளுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி : உலக மனநல தினத்தை முன்னிட்டு நேற்று பிஷப் ஹீபர் கல்லூரியில் இயங்கும் மனநல மற்றும் உணர் நல நல்வாழ்வு மையம் மற்றும் தனியார் மனநல மருத்துவமனை இணைந்து ஒரு நாள் மனநல மேம்பாடு குறித்த பயிலரங்கு நடந்தது.இந்நிகழ்ச்சியில் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மனநலம் என்ற தலைப்பில் கீழ் போட்டிகள் மற்றும் ஓவிய போட்டி, குறுங்கதை எழுதுதல், குறும்படம் தயாரித்தல், பதிகை எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டது.

மாலையில் மனநல டாக்டர். ஜனனி உளவியல் நிபுணர் மற்றும் துணை இயக்குனர் சாலை குமரன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சியில் ரீனா ரெபெல்லோ வரவேற்றார்.

கல்லூரியின் பொருளாளர் தனபால் தலைமை உரையாற்றினார். பிறகு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். தொடர்ந்து ஷர்மிளா பானு நன்றி கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மனநல ஆலோசகர்கள் டேவிட் சாம்பால், தேவசேனா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.