புதுடெல்லி: ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘‘ ஸ்டேட் வங்கியில் சம்பள கணக்குகளை பராமரிக்கும் ரயில்வே ஊழியர்கள் ரூ.1 கோடி விபத்து மரண காப்பீடு பெறுவார்கள். எந்த பிரீமியமும் செலுத்தவோ அல்லது எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யாமலேயே ரூ.10 லட்சம் இயற்கை மரண காப்பீடு திட்டத்திற்கு தகுதி பெறுவார்கள்.
விமான விபத்தில் பலியானால் ரூ.1.60 கோடி மற்றும் கூடுதலாக ரூபே டெபிட் கார்டில் ரூ.1 கோடி கூடுதலாக இழப்பீடு வழங்கப்படும். விபத்தில் நிரந்தர பாதிப்பு ஏற்பட்டால் ரூ.1 கோடி மற்றும் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டால் ரூ.80லட்சம் காப்பீடு வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.