சென்னை: மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வரும் செய்தி உண்மை இல்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதை 4 ஆண்டுகளாக தடுத்து நிறுத்தியதுபோல் இனி வரும் காலத்திலுல் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். டெல்டா பாசன விவசாயிகளின் உரிமைகளை ஒருபோதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விட்டுக்கொடுக்காது. காவிரி மேலாண்மை ஆணையத்திடமும், மத்திய நீர்வள குழுமத்திடமும் தமிழ்நாடு அரசு தனது வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது என அவர் தெரிவித்தார்.
+
Advertisement
