மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!!
டெல்லி:மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கியது. விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய நீர்வள ஆணையத்திடம் வழங்கப்படும் போது தமிழ்நாடு எதிர்ப்பை பதிவுசெய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் கருத்தை கேட்டு அதன்படி முடிவு எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை காவிரி நீர் சம்பந்தமான அனைத்து மாநில அரசுகளும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
