திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே பட்டமந்திரியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீஞ்சூர் முதல் வல்லூர் வரையிலான சாலையை சீரமைக்காமல் இருப்பதால் விபத்துகள் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இன்றிரவே சாலை சீரமைப்பு பணியை தொடங்குவதாக எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகர், அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
+
Advertisement