சென்னை: சென்னை மீனம்பாக்கம் மேம் பாலத்தில் இருந்து குதித்து ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி (39) இவர் சென்னை கணினி நிறுவனம் ஒன்றில் முதன்மை பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து கடைக்கு செல்வதற்காக வந்த போது திரிசூலம் மீனம்பாக்கம் முடிவிலுள்ள மேம்பாலத்திற்கு வந்தார். அவர் அங்கிருந்து சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதில் படுகாயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது சம்மந்தமாக மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இவர் கடந்த ஜூன் மாதம் தனியார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அங்கு அந்த நிறுவனத்தில் அவருக்கு பணிச்சுமை காரணமா அல்லது குடும்பப்பிரச்சனை காரணமா என்ற சந்தேகத்தில் மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.