ஐதராபாத்: நடிகை சமந்தாவுக்கும் இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் சில நாட்களுக்கு முன் கோவை ஈஷா யோகா மையத்தில் 2வது திருமணம் நடந்தது. புதுமண தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சமந்தா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நாக சைதன்யாவுடன் தெலுங்கு படத்தில் நடித்தபோது அவருக்கும் சமந்தாவுக்கும் ஏற்பட்ட காதலை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் விவாகரத்து செய்த நிலையில், ராஜ் நிடிமோருவை சமந்தா 2வது திருமணம் செய்துள்ளார்.
ராஜ் நிடிமோரு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இந்நிலையில் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகள் ட்ரெண்டாகி இருக்கின்றன. ஷில்பா என்பவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் அவர், \”எனது வாழ்க்கையை மாற்றியதற்கு நன்றி. என்னுடைய மிக பெரிய பரிசுக்கும் நன்றி. அந்த 15 நிமிட தியானம் எனது வாழ்க்கையையே மாற்றியது\” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ராஜ் நிடிமோருவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து, “அவரது பிரச்னை நீங்கள்தான் என்பதை உணரும் தருணம்” என்று ஜாலியாக கேப்ஷன் போட்டிருக்கிறார்.

