துபாய்: சவுதி அரேபியாவில் நடந்த துயரமான பேருந்து விபத்தில் இந்தியாவில் இருந்து யாத்திரை சென்ற 45 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள். டீசல் டேங்கர் லாரி மீது மோதியதால் பஸ்சில் இருந்தவர்கள் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகியது. இதையடுத்து அங்கேயே இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள தெலங்கானா அரசு சார்பில் அமைச்சர் முகமது அசாருதீன் தலைமையிலான தெலுங்கானா அரசு குழு, சவுதி அரேபியாவை அடைந்தது.
வுதியில் நடந்த விபத்தில் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்த உடல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இறப்புச் சான்றிதழ்களை இறுதி செய்வதற்காக சவுதி அரேபியாவுக்குச் செல்லும் குடும்பத்தினருக்கு டிஎன்ஏ பரிசோதனைகள் நடத்தப்படும். டிஎன்ஏ பொருந்தினால் மட்டுமே இறப்புச் சான்றிதழ்கள் ஒப்படைக்கப்படும் என்பதால் இறந்த யாத்ரீகர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 50 பேர் சவுதி செல்கிறார்கள். அதை தொடர்ந்து சவுதியில் விபத்தில் பலியான 45 பேருக்கும் ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய அளவிலான இறுதிச் சடங்கு தெலங்கானா அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது.


