Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உணவே மருந்து!

* இஞ்சி, மிளகு இரண்டையும் நசுக்கி நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பாலுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் திடீர் காய்ச்சல் குணமாகும்.

* முடக்கற்றான் இலையை அரிசி மாவுடன் கலந்து தோசை செய்து உண்ண உடம்பு வலி தீரும்.

* பூசணிக்காய் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி, மன அழுத்தம், உடல் நடுக்கம் போன்றவை குணமாகும்.

* குழந்தைகளின் சளிக்கு வெற்றிலை, கருந்துளசி சாற்றை தேனில் கலந்து கொடுக்க வேண்டும்.

* சொத்தைப் பல்வலிக்கு சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து பற்களில் வைக்க உடனே வலி குறையும்.

* தேவையான அளவு மிளகு பொடியை வெந்நீரில் கலந்து கரைத்துக் குடித்தால் அஜீரணம் முழுமையாக குணமாகும்.

* சர்க்கரை நோயாளிகள் வெள்ளரிக்காயை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

* மிளகு, வெற்றிலை, சீரகம் இவற்றைத் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.

* தேள்கடிக்கு வெற்றிலையுடன் மிளகு வைத்து மென்று சாப்பிட வேண்டும். கடித்த இடத்தில் சுண்ணாம்பு வைத்தாலும் விஷம் ஏறாது.

* பத்து கிராம் கடுகைப்பொடித்து கால் லிட்டர் நீரில் ஊறவைத்து வடிகட்டி கொடுக்க விக்கல் உடனே குணமாகும்.

* மூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்கு பின்னர் காலையிலும் மாலையிலும் 25 உலர் திராட்சைப்பழங்கள் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.

* மஞ்சள், வேப்பிலை சமஅளவு எடுத்து அரைத்து சேற்றுப்புண் மீது பூச, விரைவில் குணமாகும்.

* எள்பொடி செய்து வெல்லம் கலந்து மூன்று வேளை சாப்பிட மலச்சிக்கல் குணமாகும்.

* காலில் சுளுக்கு ஏற்பட்டால் சூடாக உப்பு, புளி சேர்த்து பற்று போட வேண்டும்.

- அ.ப. ஜெயபால்