ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், மீன்பிடிப்பு பருவத்தில் எதிர்பாராத விதமாக அதிகளவில் சங்குவாயன் திருக்கை மீன்கள் கிடைத்துள்ளன. பாம்பன் கடல் பகுதியில் பிடிபடும் இறால், கனவாய், நண்டு, சிப்பி போன்ற கடல் உணவுகள் வெளிநாடுகளுக்கும், உள்ளுர் மற்றும் கேரளா வியாபாரிகளும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதிக சந்தை மதிப்பை ஈட்டி தருகின்றனர். இந்த சூழலில் வரத்து அதிகரித்துள்ள சங்குவாயன் திருக்கை மீனவர்களின் வருமானத்தை பெருகியுள்ளது.
சங்குவாயன் திருக்கை இனத்தை சேர்ந்த இந்த மீன்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 100 அடி முதல் 200 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்து வாழக்கூடியவை. திருக்கை இனங்களிலேயே மிகவும் அறியதாக பிடிபடும் இந்த மீன், தற்போது சென்ற ஒவ்வொரு படகுகளுக்கு சுமார் ஒன்று முதல் இரண்டு டன் எடை அளவில் கிடைத்துள்ளது. இதனால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திருக்கை மீன்கள் வவ்வால் போன்ற முகத்தோற்றத்தையும், ஊசி போன்ற வாயை கொண்டிருக்கும். மேலும் எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள பயன்படும், மிக நீளமான மெல்லிய வாலுடனும் இருக்கும்.
பொதுவாகவே திருக்கை நல்ல சுவை கொண்டவை இருந்தாலும். சங்குவாயன் திருக்கை சதை மற்ற மீன்களை விட சற்று கடினமாக இருக்கும். இதன் மருத்துவ குணங்களுக்காக மிகவும் விரும்பப்படுகிறது. குறிப்பாக இந்த மீனை உண்ணுவதன் மூலம் இடுப்பு வலி குணமாகும். கர்பிணிப்பெண்கள் சாப்பிட்டால் இது மிகவும் நல்லது என்றும் நம்புகின்றனர். பாம்பன் துறைமுகத்தில் இந்த மீன் அதிகவரத்து காரணமாக மொத்த வியாபாரிகள் சங்குவாயான் திருக்கையை ஏலத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.120 முதல் ரூ.140 வரை விலை கொடுத்து வாங்கி சென்றனர். இந்த அரியவகை மீனுக்கு கிடைத்த நல்ல விலை. மீனவர்களுக்கு மீன்பிடி பருவம் திருப்திகரமாக அமைந்திருப்பதை கூறுகிறது. மேலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் யானை திருக்கை, குருவி திருக்கை, சோனகத்திரிகை, வவ்வால் திருக்கை உள்ளிட்ட 10க்கும் அதிகமான திருக்கை வகைகள் மீன்கள் காணப்படுகின்றனர். இது போன்ற அரிய வகை மீன்கள் கிடைப்பது மீனவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.


