“தமிழ்நாட்டில் 723 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதில் 250 அரசு மருத்துவமனைகள், 473 தனியார் மருத்துவமனைகள் என்ற அளவில் செயல்பாட்டில் உள்ளது என அப்போலோ மருத்துவமனை நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 964 அரசு மருத்துவமனைகள், 1,267 தனியார் மருத்துவமனைகள் என தமிழ்நாட்டில் 2,231 மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் பயன்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ளார்.
+
Advertisement