சென்னை: உலக இயன்முறை மருத்துவ நாளையொட்டி இயன்முறை மருத்துவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி: உலக இயன்முறை மருத்துவ நாளில் இயன்முறை மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நமது மருத்துவத் துறையின் மிக முக்கிய அங்கமாக இயன்முறை மருத்துவம் எனும் பிசியோதெரபி மிகப் பெரும் பங்காற்றி வருகிறது. எண்ணற்ற மக்களின் வாழ்வை மேம்படுத்தி வரும் இயன்முறை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நம் அனைவரின் போற்றுதலுக்கு உரியவர்களாக திகழ்கிறார்கள். அவர்களின் பணியை பாராட்டி, இந்நாளில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
+
Advertisement