நடப்பு கல்வி ஆண்டில் 8,000 எம்.பி.பி.எஸ்., முதுநிலை மருத்துவ இடங்கள் அதிகரிக்கும்: தேசிய மருத்துவ ஆணையம்
டெல்லி: நடப்பு கல்வி ஆண்டில் 8,000 எம்.பி.பி.எஸ்., முதுநிலை மருத்துவ இடங்கள் அதிகரிக்கும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. மருத்துவ இடங்களை அதிகரிக்கக் கோரி பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. விண்ணப்பித்த மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ இடங்களை அதிகரிக்க முன்னுரிமை கொடுத்து ஆய்வு நடத்தப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.