மெக்காவுக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை ரணமாக்குகிறது: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் அறிக்கை
சென்னை: சவுதி அரேபியா மதினாவில் இருந்து மக்காவுக்கு பேருந்தில் பயணம் செய்த 42 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நள்ளிரவு நேரத்தில் தனியார் பேருந்து டீசல் லாரியுடன் மோதிய விபத்தில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.
இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உட்பட 42 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் பலரது உடல் அடையாளம் காணக்கூடிய முடியாத நிலையில் உள்ளது. இந்தச் சூழலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்த குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கிறேன்.
உடல்களை இந்தியா கொண்டு வரு வதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்,சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரெஜூ தூதரகத்தின் சார்பில் உரிய நடவடிக்கைகளை துரிதமாக எடுத்து வருவதற்கு நன்றி


