மெக்கா பேருந்து விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்களை சவூதியிலேயே அடக்கம் செய்ய தெலுங்கானா அரசு ஏற்பாடு
ஐதராபாத்து: மெக்கா பேருந்து விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்களை சவூதியிலேயே அடக்கம் செய்ய தெலுங்கானா அரசு ஏற்பாடு செய்துள்ளது. சவூதியில் நேற்று அதிகாலை மெக்கா-மதீனா நெடுஞ்சாலையில் பேருந்து - டேங்கர் விபத்தில் 45 யாத்ரீகர்கள் பலியாகினர். அவர்கள் அனைவரும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
ஒரு குடும்பத்திற்கு தலா நான்கு பேரை அரசு செலவில் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு எச்ய்யப்பட்டுள்ளது. மெக்கா பேருந்து விபத்தில் உயிரிழந்த 45 பேரின் குடும்பங்களுக்கு தெலுங்கானா அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்தது.


