சென்னை: 2015ல் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான ஆண்டு கல்விக்கட்டணம் ரூ.10 லட்சமாக இருந்த நிலையில் தற்போது ரூ.30 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பல்கலை.களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்விக் கட்டணம் கடந்த 10 ஆண்டுகளில் 200% அதிகரித்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்களில் இளநிலை மருத்துவ படிப்பை படித்து முடிக்க மொத்தம் ரூ.1.5 கோடி ஆகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 77 கல்லூரிகளில் 11,700 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
Advertisement