Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு முதல் சுற்று கலந்தாய்வு கல்லூரிகள் தேர்வு செய்ய அவகாசம் நீட்டிப்பு

சென்னை: மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு http:tnmedicalselection.net என்ற இணையதளத்தில் கடந்த ஜூலை 30ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. கடந்த 4ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்று வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த அவகாசம் மீண்டும் வரும் 12ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளை மாற்றிக் கொள்ள விரும்புவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் 13ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி பட்டியல் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது. கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணையை வரும் 14ம் முதல் 22ம் தேதி வரை பிற்பகல் 12 மணி வரை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.