Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் பெரும் முறைகேடு : அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்

புதுடெல்லி: நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இந்​தி​யா​வில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​கள் மற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி​களில் வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு  (என்​ஆர்ஐ) குறிப்​பிட்ட சதவீதம் இடம் ஒதுக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், தனியார் கல்லூரிகளில் போலி ஆவணங்கள் மூலம் என்ஆர்ஐ ஒதுக்கீட்டின்கீழ் 18,000 அட்மிஷன் போடப்பட்டது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் அம்பலமாகி உள்ளது.

இந்​தி​யா​வில் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் எம்​பிபிஎஸ் படிப்​பில் சேரும் என்​ஆர்ஐ மாணவர்​கள் பலர் உண்​மை​யில் வெளி நாட்​டினர் இல்லை. சில தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​கள் ஏஜென்​டு​களுக்கு பணம் கொடுத்து போலி ஆவணங்​கள் தயார் செய்​துள்​ளனர். உள்நாட்டு மாணவர்களை வெளிநாடு வாழ் இந்தியர்போல காட்ட ஏஜென்​டு​களும் போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்துள்ளனர்.

மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஆர் ஒதுக்கீட்டில் முறைகேடாக மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் கல்லூரிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் போலி என்ஆர்ஐ சான்றிதழ்கள் சிக்கியுள்ளன. இதுதொடர்​பாக மேற்கு வங்​கத்​தில் உள்ள ஒரு தனி​யார் கல்​லூரி வங்​கி​யில் வைத்​துள்ள வைப்பு தொகை ரூ.6.42 கோடியை முடக்​கி​யுள்​ளது. இதே​போல் முறை​கேட்​டில் ஈடு​பட்ட சில தனி​யார் கல்​லூரி​களின்​ ரூ.12.33 கோடியை அமலாக்​கத்​ துறை ​முடக்​கி​யுள்​ளது.