மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் தென்படவில்லை என நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் தகவல் தெரிவித்துள்ளார். காஞ்சிவாய் பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவியில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகவில்லை. சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க தஞ்சை, திருவாரூர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement


