Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெறுப்பு, மோதல் நீங்கி சகோதரத்துவம், அமைதி நிலவட்டும்: தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து

சென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

* எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டும்.

* செல்வப்பெருந்தகை (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்): பக்ரீத் பண்டிகை தியாகத்தை போற்றுகிற நாளாகும். தியாகப் பெருவாழ்வு கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட்டு வருகிற இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

* ராமதாஸ் (பாமக நிறுவனர்): பக்ரீத் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது; மாறாக, எங்கும் அன்பு, சகோதரத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவை மட்டுமே தழைத்தோங்கும்.

* வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): வாழையடி வாழை என உறவு முறையுடன் வாழும் மரபைப் பேணி, மதச் சார்பின்மையைக் காக்கவும், சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் பக்ரீத் பண்டிகை நன்னாளில் அனைவரும் உறுதிகொள்வோம்.

* திருமாவளவன் (விசிக தலைவர்): இறை நம்பிக்கை, இறையச்சம், இறைவழி ஈகம் ஆகியவற்றை போற்றும் இசுலாமியப் பண்பாட்டு திருநாளான பக்ரீத் பெருநாளில் யாவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

* ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): இறைத் தூதரின் தியாகங்களை நெஞ்சில் பதித்து, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் நாம் அனைவரும் பாடுபடுவோம்.

* ஜவாஹிருல்லா (மமக தலைவர்): நமது நாட்டு மக்களிடையேயும் சகோதரத்துவமும், அன்பும், கருணையும், இரக்கமும் தழைத்தோங்குவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போமாக. அனைவருக்கும் நெஞ்சார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்.

இதேபோல, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், வி.கே.சசிகலா, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க தலைவர் சேம.நாராயணன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.