டிரினிடாட்: பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, 65 ஒரு நாள் போட்டிகளில் 131 விக்கெட்டுகளை சாய்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. டிரினிடாட் நகரில் நேற்று முன்தினம் நடந்த ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 49 ஓவர்களில் 280 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய பாக். 48.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 284 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் அபாரமாக பந்து வீசிய பாக். பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி, 8 ஓவர்கள் வீசி 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம், 65 போட்டிகளில் அவர் வீழ்த்திய விக்கெட்டுகள் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்து, புதிய உலக சாதனையாக உருவெடுத்தது. இதற்கு முன், ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் ரஷித் கான், 65 போட்டிகளில் 128 ரன்கள் வீழ்த்தியதே உலக சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை தற்போது, அப்ரிடி முறியடித்துள்ளார்.