லாகூர்: ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் இந்தியா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இந்தியா அதிரடி தாக்குதல்களை நடத்தி ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாக்.கில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. இதில் பெரும்பாலான தீவிரவாத இயக்கங்கள் நிலைகுலைந்து விட்டன ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தலைவர் மசூத் அசார் சகோதரி சாதியா அசார் கணவர் யூசுப் அசார் உள்ளிட்டோர் இதில் பலியாகி விட்டனர். இந்த நிலையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தில் முதன்முறையாக மகளிர் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா தாக்குதலில் பலியான யூசுப் அசார் மனைவியும், மசூத் அசாரின் சகோதரியுமான சாதியா அசார் இந்த மகளிர் பிரிவுக்கு தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
+
Advertisement