சென்னை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் காய்ச்சல் காரணமாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் (65), கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் எந்த கட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சை பெற்று வந்தாலும் காய்ச்சல் குணமாகவில்லை. அதனால் சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் நேற்று காலை சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனையை மருத்துவர்கள் செய்தனர். பரிசோதனை முடிவுகள் கிடைத்ததும் அடுத்தக்கட்ட சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தற்போது தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் நலமுடன் இருந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
+
Advertisement