மாருதி சுசூகி நிறுவனம், விக்டோரிஸ் என்ற புதிய காம்பாக்ட் எஸ்யுவி காரை அறிமுகம் செய்துள்ளது. இதில், 1.5 லிட்டர் 4 சிலிண்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது மைல்ட் ஹைபிரிட் மற்றும் ஸ்ட்ராங் என 2 விதமாக கிடைக்கிறது. என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் சிஎன்ஜியும் உள்ளது. மைல்டு ஹைபிரிட் இன்ஜின் அதிகபட்சமாக 103 எச்பி பவரையும், ஸ்டிராங் ஹைபிரிட் 116 எச்பி பவரையும், சிஎன்ஜி வேரியண்ட் 89 எச்பி பவரையும் வெளிப்படுத்தும். சிஎன்ஜி காரின் கீழ் பகுதியில் பேக்டரியிலேயே பொருத்தப்பட்டு வரும். இதனால் அதிக இட வசதியும் கிடைக்கும்.
வேரியண்ட்களுக்கு ஏற்ப 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க்யூ கன்வர்டர் கியர் பாக்ஸ்கள் கொண்டதாக இருக்கும். எல்இடி ஹெட்லாம்ப், பிக்சல் ஸ்டைல் டிஆர்எல்கள், பின்புறம் எல்இடி பார் இடம் பெற்றிருக்கும்10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிரைவர் டிஸ்பிளே, பனோரமிக் சன்ரூப், 64 வண்ண ஆம்பியன்ட் லைட்டிங், டயரில் காற்று அழுத்தம் அறியும் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, லெவல் டூ அடாஸ் உள்பட பல அம்சங்கள் உள்ளன.
6 வேரியண்ட்களில் கிடைக்கும். பாரத் பாதுகாப்பு சோதனையில் 5 ஸ்டார் பெற்றுள்ளது. ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டாஸ், டொயோட்டா அர்பன் குரூசர் ஹைரைடர், எம்ஜி அஸ்டார், ஹோண்டா எலவேட் ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.