சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி வரும் 19ம் தேதி முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்று, 3 ஒரு நாள், 5 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. இப்போட்டிகளில் மோதும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆஸியின் ஒரு நாள் மற்றும் டி20 அணிகளுக்கு கேப்டனாக மிட்செல் மார்ஷ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் அணியில் சேவியர் பெர்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கனோலி, பென் துவார்சுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலீஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா இடம்பெற்றுள்ளனர்.