திருவனந்தபுரம்: திருமணமான பெண்ணோடு உடன்பட்டு உறவில் இருப்பது பலாத்காரம் ஆகாது என்று கேரள ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 'திருமணமான பெண்ணுடன் உறவில் இருந்து பின்பு திருமணம் செய்ய மறுத்தால் பலாத்காரம் ஆகாது. கணவர் உயிரோடு இருந்தபொழுதே வேறு நபருடன் விருப்பத்துடன் பெண் உறவில் இருந்திருப்பது உறுதியாகி உள்ளது. கணவர் இறந்த பின் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முந்தைய உறவை காரணம் காட்டி வற்புறுத்த முடியாது. கணவர் இறந்த பின், திருமணம் செய்ய மறுத்தவரை பலாத்காரம் செய்தார் என்று குற்றம்சாட்ட முடியாது. சம்பந்தப்பட்ட நபர் வேறு திருமணம் செய்துவிட்டதால், உறவில் இருந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூற முடியாது' என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 35 வயது இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
+
Advertisement


