திருமணத்துக்கு முந்தைய நெருக்கம் தற்போதைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது: உயர்நீதிமன்ற மதுரை கிளை
மதுரை: உணர்ச்சி ரீதியான விளைவுகளைத் தீர்ப்பதற்கு சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது. திருமணத்துக்கு முந்தைய நெருக்கம் தற்போதைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். பெண் கொடுத்த புகாரின் தன் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி இளைஞர் மனு தாக்கல் செய்தார். 'தற்போது நிலவும் சமூக யதார்த்தங்களை நீதிமன்றம் அறிந்திருக்கிறது. இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது என்பது தனிப்பட்ட விருப்பத்தின் எல்லைக்குள் உள்ளது. உறவு பாசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதா, திருமண எதிர்பார்ப்பா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.


