மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. 29 வயதான மந்தனா, பாடகர் மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலை கடந்த 2019ம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். 30 வயதான பலாஷ் முச்சல், பிரபல பாடகி பாலக் முச்சலின் சகோதரர் ஆவார்.
இவர்களின் திருமணம் நாளை மறுநாள் மும்பையில் நடைபெற உள்ளது. இதனிடையே திருமண நிச்சயம் நடைபெற்றதை மந்தனா வித்தியாசமாக அறிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ள ரீல்ஸ் வீடியோவில் ஸ்மிருதி மந்தனாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ் மற்றும் அருந்ததி ரெட்டி 2006ல் வெளியான ‘லகே ரஹோ முன்னா பாய்’ படத்தின் ‘சம்ஜோ ஹோ ஹி கயா’ பாடலுக்கு நடனமாடினர்.
வீடியோவின் கடைசி பிரேமில், ஸ்மிருதி மந்தனா தனது மோதிர விரலில் அணிந்திருக்கும் நிச்சயதார்த்த மோதிரத்தை கேமராவிற்கு காட்டினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மந்தனாவின் திருமணத்தில் சக கிரிக்கெட் வீராங்கனைகள், திரைபிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். பிரதமர் மோடியும் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.


