*300 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை
*அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்
கரூர் : மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்து, மண்மங்கலம் தாலுகா அட்லஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் சீர் வரிசை பொருட்கள் மற்றும் 98 மகளிர்களுக்கு ரூ.1.18 கோடி மதிப்பில் 784 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகையை வழங்கினார்.இந்த நிகழ்வு குறித்து அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு முதல்வர் மகளிர் முன்னேற்றத்திற்காக சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் ஊட்டச்சத்த இயக்க திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் உள்ள 8 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கர்ப்பிண பெண்களுக்கு சமூதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட சீர்வரிசை தாம்பூலங்கள் மற்றும் 5 வகை உணவுகள் அரசால் வழங்கப்படுகிறது.
உணர்வுபூர்மான இந்த நிகழ்வில் பங்கேற்பது நெகிழ்ச்சியாக உள்ளது. கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு தாயுக்கும் மறுபிறவி என்றே குறிப்பிடும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதை உணர்ந்த கலைஞரின் ஆட்சியில் கர்ப்பணி பெண்களுக்கு இந்தியாவில் வேறு எங்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது, இவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தும் அரசாக இந்த அரசு விளங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதல்வரின் திராவிட மாடல் அரசு ஒரு தந்தையாக இருந்து மகப்பேறு திட்டங்களை மேம்படுத்தி வருகிறார்.
குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் கடந்த 2021 முதல் 2024 வரை பட்டம் மற்றும் பட்டயம் படித்த 1126 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ 50 ஆயிரம் வீதம் ரூ.56,300,000 கோடி திருமண நிதியுதவியும், 9008 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.10ம் வகுப்பு படித்த 456 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 11,400,000 கோடி திருமண உதவியும், 3648 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டுமே கர்ப்பிணி தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலை, குழந்தை பிறந்து தடுப்பூசி செலுத்துவது, ஊட்டசத்து வரை கர்ப்பிணிகள் மீது தனிக்கவனத்துடன் கண்காணித்து மருத்துவ உதவி வழங்கி வருகிறது. இந்த நிகழ்வில் மட்டும் 300 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் 5 வகையான கலவை சாதங்கள் விருந்தான அரசின் சார்பில் பரிமாறப்பட்டது.
இதுபோன்ற சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்துவதால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஊட்டசத்து குறைபாடானது இந்தியாவிலலேய தமிழ்நாட்டில் குறைவானதாக உள்ளது என்றார்.இதனைத் தொடர்ந்து, மாவட்ட சமூக நலத்துறையின் சார்பாக பட்டப் படிப்பு முடித்த 71 மகளிர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம், 35,50,000 மதிப்பில் திருமண நிதியுதவிகளையும், தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் ரூ. 43,21,060 மதிப்பிலும், 10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த 21 மகளிர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ. 6,75,000 மதிப்பில் திருமண நிதியுதவிகளையும், தலா 8 கிராம் தாலிக்குதங்கம் ரூ. 63,3220 மதிப்பில் என மொத்தம் 784 கிராம் தங்கம் ரூ. 59,64,280 என மொத்தம் ரூ. 1,01,89,280 மதிப்பில் திருமண நிதியுதவியும் மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்வில், எம்பி ஜோதிமணி, எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், கோட்டாட்சியர் முகமது பைசல், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) சுவாதி, மண்டல குழு தலைவர்கள் கனகராஜ், ராஜா, சக்திவேல், அன்பரசு உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.