Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மார்க் தானே வேணும்... 100க்கு 120 மதிப்பெண் வழங்கி ராஜஸ்தான் பல்கலை தாராளம்

ஜோத்பூர்: ஜோத்பூர் பொறியியல் பல்கலைக்கழகம் 100 மதிப்பெண் தேர்வில் 120 மதிப்பெண்கள் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எம்பிஎம் பொறியியல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலை சார்பில் பிஇ இரண்டாம் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் மாணவர்கள் எழுதிய 100 மதிப்பெண் தேர்வில் அவர்களுக்கு 120 மதிப்பெண்கள் வரை வழங்கி பல்கலை அசத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளில் உள்ள பிழையை பல மாணவர்கள் சுட்டிக்காட்டியபோது, ​​நிர்வாகம் எந்த விளக்கத்தையும் வெளியிடாமல் முடிவுகளை நீக்க முயன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பல்கலை குறித்து அரசிடம் புகார் தெரிவித்தனர். எம்பிஎம் பல்கலைக்கழகம் கடந்த காலங்களிலும் இதே போல் தவறான ரிசல்ட்டை வெளியிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் பல்கலை துணை வேந்தரிடமும் புகார் அளித்தனர்.

இதுபற்றி விசாரணை நடத்த ராஜஸ்தானில் உள்ள பா.ஜ அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபற்றி எம்பிஎம் பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் அஜய் சர்மா கூறுகையில்,‘மதிப்பெண் பதிவிடுதலில் பிழை நடந்தது உண்மைதான். பிழை கவனிக்கப்பட்டவுடன் முடிவுகள் உடனடியாக நீக்கப்பட்டன’ என்றார்.