Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மன்னார்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 372 மனு பெறப்பட்டன

*பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

மன்னார்குடி : மன்னார்குடியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாமில் பொது மக்கள் 372 மனுக்களை அளித்தனர்.பொது மக்களின் குறைகளை அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ”உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் நகரப் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 வகையான சேவைகளும் அது போல் கிராமப் பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 வகை யான சேவைகளும் பெற முடியும். முக்கியமாக இம்முகாம்களில் மகளிர் உரிமையைத் தொகை பெற விண்ணப்பங்கள் பெறலாம் எனவும் அறிவிக்கப் பட்டிருந்தது.

இம்முகாம்களில் பெறப் படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் உரிய தீர்வு காண வேண்டுமென அதிகாரிகளு க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதையடுத்து, மன்னார்குடி நகரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. முகாமை நகர் மன்ற தலைவர் மன்னை சோழராஜன் துவ க்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், நகராட்சி ஆணை யர் சியாமளா, முன்னிலை வகித்தனர்.இம்முகாமில் 5 மற்றும் 6 வது வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு பொது மனுக்கள் 256, மகளிர் உரிமைத் தொகை கேட்டு 116 மனுக்கள் என மொத்தம் 372 மனுக்களை அளித்தனர்.

முன்னதாக, பொதுமக்கள் மனுக்கள் வழங்குவதை மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், பார்வையிட்டு ஆய்வு செய்து பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில், வட்டாச்சியர் கார்த்திக், நகர் மன்ற துணைத்தலைவர் கைலாசம் நகராட்சி மேலாளர் மீரான் மன்சூர், நகர் மன்ற உறுப்பினர்கள் ராஜ பூபாலன், இந்திரா உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.