மன்னார்குடி : திருவாரூர் மாவட்ட எஸ்பி கரூன்கரட் அறிவுறுத்தலின்பேரில் காவலர் குறைதீர் கூட்டம் மன்னார்குடியில் நேற்று நடந்தது. இதில் டிஎஸ்பி மணிவண்ணன், மன்னார்குடி காவல் உட் கோட்டத்தில் இருந்து வரும் மன்னார்குடி டவுன், தாலுகா, அனைத்து மகளிர் காவல் நிலையம், பரவாக்கோட்டை, திருமக்கோட்டை, தலையாமங்கலம், தேவங்குடி, வடுவூர், நீடாமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது பேசிய டிஎஸ்பி. காவலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். நிகழ்ச்சியில், முத்துப்பேட்டை டிஎஸ்பி பிலிப்ஸ் பிராங்கிளின் கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் மன்னார்குடி ராஜேஷ் கண்ணன், வடுவூர் சத்தியமூர்த்தி, நீடாமங்கலம் ராஜு அனைத்து மகளிர் அகிலாண்டேஸ்வரி உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.