திருவாரூர்: மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 27 யுபிஎஸ் பேட்டரிகள் திருடப்போய் உள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு தலைமை மருத்துவமனை என்பது செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான பாமணி அதேபோன்ற சவளக்காரன், வடுவூர் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வந்து தங்கள் மருத்துவ சேவைக்காக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த மருத்துவமனை வளாகத்தில் வந்து அரசு தாய் சேய் நலப்பிரிவு செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் மின்தடை ஏற்பட்டால் யுபிஎஸ் பேட்டரிகள் மூலமாகவே அங்குள்ள நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைகக்காக அந்த யுபிஎஸ் பேட்டரிகள் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அந்த மகப்பேறு கட்டிடத்தில் ஒட்டுமொத்தமாக 40 யுபிஎஸ் பேட்டரிகள் இருந்துள்ளது. இதில் 27 யுபிஎஸ் பேட்டரிகள் காணாமல் போயிருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த 12-ம் தேதி மகப்பேறு மருத்துவமனையில் போலீசார் நேரடியாக வந்து ஆய்வு செய்தபோது ரூ.4 லட்சம் மதிப்பிலான பேட்டரிகளை திருட போயிருப்பதாக தகவல் தெரிவித்தனர். இதன் சம்மதமாக அங்குள்ள எலட்ரீசியன் அதுமட்டுமல்லாமல் சூப்பர்வைசர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. குறிப்பாக இந்த பேட்டரி காணாமல் போனதால் அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.