இம்பால்: மணிப்பூரில் தடை செய்யப்பட்ட அமைப்புக்களை சேர்ந்த 4 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். கக்சிங் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலை படையை சேர்ந்த ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.
இதேபோல் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் போன்ஜெங்பாமில் இருந்த இதே அமைச்சை சேர்ந்த மற்றொரு தீவிரவாதி கைது செய்யப்பட்டார். தெங்னவ்பால் மாவட்டத்தில் மோரே கேட்டில் தடை செய்யப்பட்ட பிஆர்ஓ அமைப்பை சேர்ந்தவரை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். இம்பால் மேற்கு மாவட்டத்தில் யும்உம் ஹூய்ட்ரோமில் தடை செய்யப்பட்ட கேசிபியை சேர்ந்த ஒருவர் கைதானார்.


