இம்பால்: மணிப்பூரில் பிரதமர் மோடியின் கட்அவுட்டை சேதப்படுத்தியதாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பாதுகாப்புப் படை மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கினர். மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையுடன் பயங்கர மோதலில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் அதிகரித்ததால் இரு இளைஞர்களும் விடுவிக்கப்பட்டனர். அதன் பின் நிலைமை சீரானதாக போலீசார் விளக்கமளித்தனர்.
+
Advertisement