இம்பால்: மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.சுந்தர் நேற்று பதவியேற்றார். மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஓய்வு பெற்றார். இதையடுத்து அப்பதவியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சுந்தரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் பரிந்துரை செய்தது. அதை தொடர்ந்து கடந்த 13ம் தேதி நீதிபதி சுந்தரை மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார் என்று ஒன்றிய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,நீதிபதி எம்.சுந்தர் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் 10வது தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள்,உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில அரசின் உயர் அதிகாரிகள்,வழக்கறிஞர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement