Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மணிப்பூரில் டிரோன் பறந்ததால் விமானங்கள் ரத்து

இம்பால்: மணிப்பூரில் உள்ள இம்பால் விமான நிலையத்தில் நேற்று பிற்பகல் டிரோன் பறந்ததாக தெரிகின்றது. இந்த சம்பவம் பாதுகாப்பு குறித்த அச்சத்தை எழுப்பியது. அகர்தலாவில் இருந்து இம்பால் சென்ற இன்டிகோ விமானம், பிற்பகல் 2 மணியளவில் விமான நிலையத்தை நெருங்கும் நிலையில் சுமார் 3600அடி முதல் 4000 அடி உயரத்தில் டிரோன் பறந்ததாக தெரிவித்தது. இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் விமான செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.