மணிப்பூர்: மணிப்பூரில் குக்கி தேசிய ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்த போராளிகளுக்கும் ராணுவத்துக்கும் மோதல் ஏற்பட்டது. சூர்சந்த்பூர் மாவட்டம் கான்பி என்ற கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 போராளிகள் உயிரிழந்தனர். சூர்சந்த்பூர் மாவட்டத்தில் ஆயுதம் தாங்கிய போராளிகளை எதிர்த்து இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மோதல் நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிகுண்டுகளை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர்.
+
Advertisement
