Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

30 ஆண்டுகளாகி விட்டதால் செடி,கொடிகளால் மண்டி கிடக்கும் மணிமுத்தாறு: தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

திருவாடானை: திருவாடானை பகுதியில் பல பெரிய கண்மாய்களை இணைக்கும் மணிமுத்தாற்றை தூர்வாரி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே அதனை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை எடுத்துள்ளனர். திருவாடானை பகுதியில் அதிகளவில் பெரிய பரப்பளவை கொண்ட கண்மாய்கள் நிறைய உள்ளன. இவைகள் அடுத்தடுத்து சங்கிலித் தொடர் போல் உள்ளது. இந்த கண்மாய்களுக்கு இடையே மணிமுத்தாறு எனும் காட்டாறு செல்கிறது. அதிக மழை பெய்யும் சமயத்தில் இந்த காட்டாறு வழியே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி கண்மாய்கள் நிரம்பும்.வடக்கு பகுதியில் இருந்து ஒவ்வொரு கண்மாயாக நிரம்பி, தென்புறம் மற்றும் கீழ்புறமாக இந்த மணிமுத்தாறு வழியாக தண்ணீர் செல்லும். கடைசியாக மீதமுள்ள உபரி தண்ணீர் கடலுக்குச் சென்றடையும். இதனால் இந்த பகுதியில் உள்ள மணிமுத்தாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் முக்கியத்துவம் கருதி தூர்வார அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மணிமுத்தாறு கண்மாய் தூர்வாரப்பட்டது. அதன் பிறகு ஒரு முறை கூட தூர்வாரப்பட வில்லை. இதனால் அதிகளவு மழை பெய்யும்போது, தண்ணீர் கண்மாய்களுக்கு பெருகவும், உபரி தண்ணீர் கடலுக்கு செல்லவும், சீமைக்கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மேடாகி விட்டது. எனவே இந்த மணிமுத்தாற்றை தூர்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,சிவகங்கை பகுதியில் பெய்யும் மழை தண்ணீர் மணிமுத்தாறு வழியாக திருவாடானை பகுதிக்கு வந்து, அஞ்சு கோட்டை பெரிய கண்மாய், அழகமடை கண்மாய், திருவாடானை கண்மாய், ஆதியூர் கண்மாய், மாஞ்சூர் கண்மாய், கருப்பூர் கண்மாய், திருவெற்றியூர் பெரிய கண்மாய், முகிழ்தகம் பெரிய கண்மாய் ஆகிய 50க்கும் மேற்பட்ட கண்மாய்களை தண்ணீர் நிரப்பி மீதமுள்ள உபரி தண்ணீர் கடலுக்கு செல்லும்.

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த மணிமுத்தாறு தூர்வாரப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பாராளுமன்ற தொகுதி நிதியில் சுதர்சன நாச்சியப்பன் எம்பி ஆக இருந்தபோது இந்த மணிமுத்தாறு தூர்வாரப்பட்டது. அதன் பிறகு தூர்வாரப்படவே இல்லை. இதனால் கண்மாய்கள் நிரம்புவதும் உபரி தண்ணீர் கடலுக்குச் செல்வதும் தடை ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறு முழுவதும் சீமை கருவேல மரங்களும் செடி, கொடிகளும் மண்டி கிடக்கிறது. மேலும் தூர்ந்து மேடாகி விட்டது. பல இடங்களில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மணிமுத்தாற்றை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.