திருச்சிராப்பள்ளி: மணப்பாறையில் 7 மாத கர்ப்பிணியை தெருநாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. அனைத்து வார்டுகளிலும் தெருநாய்கள் சாலையில் சுற்றி திரிவதாகவும். பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் வரை நாய்கள் துரத்தியதால் கீழே தடுமாறி விழுந்து அடிக்கடி காயம் ஏற்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை மணப்பாறை லட்சுமிபுரம் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் சங்கரி என்பவரை நடந்து செல்லும் போது தெருநாய்கள் துரத்தி கடித்துள்ளது. கர்ப்பிணி பெண் அங்க இருந்து ஓடமுடியாமல் தவிர்த்த நிலையில், அந்த பெண் காலில் நாய் கடித்துள்ளது. தடுக்க முடியாமல் ரொம்ப சிரமம்பட்டுள்ளார். அப்பகுதியில் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த பெண்ணை காப்பாற்றி நாய்கள் துரத்தி உள்ளனர்.
பின்னர் அந்த பெண் தனியார் ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சங்கரி சிகிச்சை பெற்று வருகின்றார். இதனிடையே நகராட்சி பகுதியில் உள்ள நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த வந்த நிலையில், கர்ப்பிணியை நாய் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
  
  
  
   
