மதுரை : மதுரை செக்கானூரணியில் பள்ளி அருகே மதுபான மனமகிழ் மன்றத்துக்கு தடை கோரி ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுபான விடுதிக்கு இதுவரை மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்று அரசு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து, நீதிமன்றத்தில் கூறியதை மீறி அனுமதி தந்தால் கடையை இடிக்க உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மனு குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
+
Advertisement