பெய்ஜிங்: மனிதன் ஆயுள் காலத்தை 150 ஆண்டுகள் நீடிக்கும், சாகா வர மாத்திரைகளை சீனா நிறுவனம் ஒன்று, தயாரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் ஷாங்காய் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் நடந்த ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா அதிபர் புதின் பங்கேற்றார்.அப்போது ரஷ்யா அதிபர் புதினும், சீனா அதிபரும் நடந்து செல்லும்போது பேசிக்கொண்ட ஆடியோ அருகில் இருந்த மைக்கில் பதிவானது. இந்த ஆடியோவில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்தும், சாகா நிலைக்கான சாத்தியங்கள் இருப்பது குறித்தும் அவர்கள் பேசும் சுவாரஸ்யமான உரையாடல் வெளியானது.
கடந்த காலத்தில் மக்கள் 70 வயதுக்கு மேல் வாழ்ந்தனர். ஆனால் இன்று 70 வயதிலும் உங்களை ஒரு குழந்தை என அழைக்கிறாங்க என சீனா அதிபர் கூறினார். அதற்கு பதிலளித்த புதின் மனித உறுப்புகளை தொடர்ந்து மாற்றலாம் எவளோ காலம் வாழ்கிறீங்களோ அவளோ இளமையாக மாறுவீர்கள். சாகா நிலைக்கும் கூட செல்லலாம் என்றார். இந்த நிலையில் தான் ஒரு சீனா உயிரி தொழிநுட்ப ஸ்டார்ட்டுப் நிறுவனம் 150 ஆண்டுகளை வரை மனிதன் ஆயுள் காலத்தை அதிகரிக்கும் மாத்திரைகளை உருவாக்க முயற்சித்து வருவதாக அறிவித்துள்ளது. லான்வி பயோசயன்சஸ் என்ற சீனா நிறுவனம் ஆன்டி ஹிங் எனப்படும் முதுமை எதிர்ப்பு மாத்திரைகளை உருவாக்கி வருகிறது.
இந்த மாத்திரைகள் உடலில் உள்ள சோனி செல்கள் என அழைக்கப்படும் ஆரோக்கியமான செல்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதே சமையம் வயதான செல்களை குறிவைத்து தாக்கி அளிக்கும், இந்த மாத்திரை திராட்சை விதை சாற்றில் இருந்து பெறப்பட்டு சேர்மத்தை உருவாக்கப்படுகிறது. அந்த நிறுவனம் நடத்திய சோதனையில் இந்த மருந்து வயதான செல்களை அளித்து ஆரோக்கியமான செல்களை பாதுகாப்பதன் மூலம் ஆயுள் காலம் நீடிப்பதாக கூறப்படுகிறது. சரியான வாழ்கை முறை மற்றும் முறையான மருத்துவ சிகிச்சையை பெற்றால் மனிதர்கள் 120 வயது வரை வாழ்வு உதவும் என்று லான்வி பயோசயன்சஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
