மதுரை: மதுரை, தத்தனேரியை சேர்ந்தவர் சித்ரா (48). இவuது மகன்கள் சிவராம் கவுசிக் (19), யோக சுதீஷ் (17). இதில் சிவராம் கவுசிக், படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். யோகசுதீஷ் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அவருக்கு ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்ற ஆர்வம் இருந்தது.
இதற்காக கடந்த மாதம் ஈரோட்டில் நடந்த ராணுவ ஆட்தேர்வு முகாமில் பங்கேற்றார். அப்போது, கையில் பச்சை குத்தியிருந்ததால் அவர் நிராகரிக்கப்பட்டார். இதனால் ராணுவத்தில் சேர முடியவில்லையே என மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.