பேராவூரணி : தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லிப்பட்டினம் -கள்ளிவயல் தோட்டம் மீன்பிடி துறைமுகம் அருகே நேற்று மாலை கடற்கரையையொட்டி கடலுக்குள் கிடந்த கற்சிலையை பார்த்த மீனவர்கள் அதை மீட்டனர்.
பின்னர் சிலையை கரைக்கு கொண்டு வந்தனர். சுமார் 5 அடி உயரமுள்ள முகம் சிதிலமடைந்த நிலையில் அம்மன் கற்சிலையாக இருந்தது.
இது குறித்து காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். கற்சிலை பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியது, ஜாதகம், சோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ள சிலர் பரிகாரத்திற்காக கடலில் சிலையை வீசினால் நல்லது நடக்கும் என சோதிடர்கள் கூறியதை கேட்டு எவராவது கடற்கரை ஓரம் சிலையை போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்றார்.